அண்மைய நாட்களில் வலைப்பூக்களில் மிகவும் சூடுபிடித்துள்ள விடயம் லீனாவின் பெண்குறி ஆண்குறி குறித்த கவிதையும் அதைதொடரும் வாதங்களுமாகும்.லீனா மணிமேகலை பெண்ணியம் பேசிக்கொண்டு தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடுகிறார்.குறிப்பாக தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அல்லது சாதித்துக்கொள்ள விலைமகள் போல செயற்படுகிறார் என்ற குற்றச்சாட்டு ஏனைய பெண்ணியம் பேசுவோரை குறிப்பாக பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து பெண்ணான லீனா மணிமேகலை மிக இலகுவாக திரைப்பட இயக்குனர் பாரதிராஜா சேரன் போன்றவர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பை மிக இலகுவாகபெற்றதும் (பாரதிராஜாவை பார்ப்பதற்கு கூட முடியாமல் பல உதவி இயக்குனர்கள் இருக்கிறார்கள் என்கிறது வினவு ). இதுபோன்ற பல செல்வாக்கு மிக்க ஊடக, அரசியல் தொடர்புகளை அவர் பெற்றதும், பல ஆடம்பர வீடுகள், நவீன படத்தொகுப்பு கலையகம், கார் சொத்துக்கள் என சேர்த்துக் கொண்டுள்ளமையும் பற்றி பல வலைபூக்களிலும் இணையதளங்களிலும் அதிகம் விமர்சிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளை மிக நீண்ட காலமாக தாக்கியும் எதிர்த்தும் வருகின்ற பிரபல புலி எதிர்ப்பு கர்த்தா ஷோபாசக்தியோடு இணைந்து செங்கடல் எனும் குறும்படத்தை இயக்கிய மணிமேகலை அதில் பணிபுரிந்தவர்களுக்கு ஊதியம் கொடுக்காமல் ஏற்பட்ட சர்ச்சையில் காவலர்களை (போலீசாரை) தாக்கியதாகவும் (அல்லது தள்ளி விட்டதாகவும்), இதைபடம் பிடித்த காவலரின் அலைபேசியை பறித்ததாகவும் தினத்தந்தி உட்பட பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதாவது கணவன் பார்த்திருக்க மனைவியை பாலியல் வல்லுறவு கொண்டு கணவனை சுட்டுக்கொன்ற(பல) வரலாற்றைக்கொண்ட தமிழக காவலரை மணிமேகலை மட்டும் எப்படி இப்படி எதிர்க்க முடிந்ததது? பிறகு கைது, வழக்கு என்று எவ்வித தண்டனையும் இல்லாமல் காவல் நிலையத்திலிருந்து எப்படி செல்ல முடிந்ததது ? பெரும் புள்ளிகளின் ஆதரவு இல்லாமல் வெளியேசென்று இருக்க முடியுமா? என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இதுதவிர குறும்படங்கள் தயாரிப்பதாக சொல்லி பலரை ஏமாற்றி இருப்பதாக மணிமேகலை மீது குற்றம் சாட்டப்படுகிறது. சுவிசில் வாழும் இலங்கை தமிழரான அஜீவன் என்பவரை ஏமாற்றி பல லட்சங்களை சுருட்டிக்கொண்ட லீனா மணிமேகலை அதை கேட்கச்சென்ற அஜீவனை புலி என்று சொல்லி சிறையில் தள்ள முயற்சி செய்தார் என குற்றம் சாட்டப்படுகிறது. (இதை அஜீவனே தேசம் நெட்டில் குறிப்பிட்டு இருக்கிறார்.
வினவின் பின்னூட்டத்தில் முழுதாக உள்ளது )
ஏற்கனவே ஆண் அடக்கு முறைக்கு எதிராக பேசுகின்ற எழுதுகின்ற பெண்கள் தொடர்பில் ஒரு விதமாக பார்க்கும் தமிழ் சமூக சூழலில் லீனா மீது எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டுக்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
சரி புகைந்து கொண்டிருந்த லீனா மணிமேகலை விடயம் எப்படி பெருநெருப்பை மாறியது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்....அதற்கு நீங்கள் லீனா எழுதிய இந்த கவிதையை வாசிக்க வேண்டும்.
ஒரு புணர்தலின் உச்சியில் விலகி
அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி
தோழர் என்றெழுதினாய்
உடலை உதறி கொண்டு எழுந்து
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்
என்று பிதற்றினாய்
கால்களுக்கிடையே தலையை இழுத்தேன்
உபரி என யோனி மயிரை விளித்தாய்
உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்
லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்
பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்
முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்
மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்
பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்
இடையின் வெப்பத்தில் புரட்சி என்றாய்
மூச்சின் துடிப்பில் பொதுவுடைமை என்றாய்
குறியை சப்ப குடுத்தாய்
பெர்லின் சுவர் இடிந்தது
சோவியத் உடைந்தது
எழுச்சி என்றாய்
அமெரிக்கா என்று அலறி ஆணுறை அணிந்தாய்
கீழே இழுத்து
உப்பை சுவைக்க சொன்னேன்
கோகோ கோலா என்று முனகினாய்
மயக்கம் வர புணர்ந்தேன்
வார்த்தை வறண்ட
வாயில் ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப் போட்டேன்
இது கட்டவிழ்ப்பு என்றேன்
கம்யுனிசத்திற்கு எதிராக (அல்லது போலி கம்யுனிசத்திற்கு எதிராக)அவர் எழுதிய இந்த கவிதையே லீனா சர்ச்சையை பெரு நெருப்பாக மாற்றிய எனலாம்.ஸ்டாலின் சார்புடைய வினவு தளம் உள்ளிட்ட சில தளங்கள் லீனா மீது பெரும் தாக்குதலை தொடுத்தன. தமிழச்சியும் கண்டித்திருந்தார்.
லீனாவோ இந்த விமர்சனங்களை தனது கால் தூசுக்கும் மதிக்கப்போவதில்லை என பதிலடி கொடுத்தார்.
மறுபுறம் லீனா மணிமேகலை மதிக்கப்படுகின்ற ஒரு பெண்ணியவாதி.
இவரை ஒரு குறும்பட இயக்குனர் என்பதை விட, தமிழ்ச் சமூகத்தில் ஒடுக்கப் பட்டோரின் குரலை வெளிக்கொணரப் போராடும் ஒரு போராளி. குறும்படம், கவிதை, புத்தகங்கள், நிகழ்ச்சிகள் என்று பலவாறாகக் கனவுப்பட்டறை (kanavuppattarai.com) மூலமாக நிகழ்த்துகிறார். திரைப்படத் துறையில் பெயர்பெற்ற இயக்குனர்களுடன் பணிபுரிந்திருக்கும் இவர் எஸ்.ராமகிருஷ்ணனின் 'உலக சினிமா' புத்தகத் தயாரிப்பிலும் பணி புரிந்திருக்கிறார். சமூக நாட்டம் கொண்டோருக்குத் திரைத்துறை மீது தோன்றியிருக்கும் அவநம்பிக்கையைப் போக்கும் விதமாகத் "திரை" என்ற மாத இதழைக் கொண்டு வருகிறார். டொராண்டோ சர்வதேசக் குறும்பட விழாவில் சிறந்த இந்தியத் திரைப்படத்துக்கான விருதை இவரது 'தீர்ந்து போயிருந்த காதல்' பெற்றிருக்கிறது. என ஊடங்கங்கள் லீனவைப்பற்றி சிலாகிக்கின்றன.
குறிப்பாக காலச்சுவடு இதழானது, - இலக்கியப் பின்புலம் கொண்ட லீனா மணிமேகலை தன்னுடைய 'மாத்தம்மா' மற்றும் 'பறை' ஆகிய ஆவணப் படங்கள் மூலம் கவனம் பெற்றவர். சமூகத்தின் சில பாரம்பரியமான கண்மூடிப் பார்வைகளால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படும் சிற்றினக் குழுக்களின் வாழ்நிலையைக் கவனப்படுத்தும் விழைவுகள் கொண்டவர். இவருடைய 'பலிபீடம்' ஆவணத் திரைப்படம் குழந்தைத் திருமணம் குறித்த ஒரு இனவரைவியல் போக்கை ஆவணப்படுத்தும் முயற்சியாகும்.- எனப்பாரட்டியுள்ளது. இவரது குறும்படங்கள் உலக அளவில் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எல்லாம் சரி இந்தப்பதிவின் தலையங்கம் லீனா மணிமேகலை- ஏமாற்றுக்காரியா? பெண்ணியவாதியா? என்பது. அதற்கு பதில் என்ன என நீங்கள் கேட்கலாம். ஐயா பெரியோரே அறிஞர்களே என்னிடம் இதற்கு பதில் இல்லை....உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.
லீனா மணிமேகலை- ஏமாற்றுக்காரியா? பெண்ணியவாதியா?
- ஜீவேந்திரன்
Jeevendran

0 comments:
Post a Comment